தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பல்வேறு யாகங்களையும் ஹோமங்களையும் இவ்வாலயம் நிகழ்த்தி வருகிறது. கோடி அர்ச்சனை, நவகோடி அர்ச்சனை, சகஸ்ர மஹா சண்டிஹோமம், காயத்திரி மஹாமந்ர ஹோமம் போன்றவை இதுவரை நடைபெற்றுள்ளன. இவ்வாலயம் உருவாகியது முதல் இன்று வரை அம்பாளின் அருட்சக்தியால் பெரும்பேறுகளை அடைந்தவர்கள் பலர். 'தாய்க்கோவில்', 'அற்புதக் கோவில்' என இந்துக்கள் கொண்டாடும் ஆலயமாக இது பரிணமித்துள்ளது..
|